தூத்துக்குடியில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பு மாணவ, மாணவிகள் உற்சாகம்
தூத்துக்குடியில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறை நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதனால் மாணவ-மாணவிகள் நேற்று காலை முதல் பள்ளிக்கூடத்துக்கு உற்சாகமாக வந்தனர். பல மாணவ-மாணவிகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்று விட்டனர். விடுதிகளில் தங்கி இருந்த மாணவ-மாணவிகளும் தங்கள் உடைமைகளுடன் நேற்று பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அவர்களையும் பெற்றோர் அழைத்து வந்து விடுதிகளில் விட்டு சென்றனர்.
அதே போன்று பெரும்பாலான பள்ளிக்கூடத்துக்கு வந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் நுழைவு வாயிலில் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் பள்ளிக்கூட வகுப்பறைகளில் அரசின் இலவச பாடப்புத்தகங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதையொட்டி நேற்று காலை முதல் ஆட்டோ, வேன்களில் மாணவ-மாணவிகள் பரபரப்பாக பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். இதனால் தூத்துக்குடி மாநகரம் பரபரப்பாக காணப்பட்டது.