திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் இடஒதுக்கீடு விவரம்
திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களின் வார்டுகள் இடஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது;
திருப்பூர்,
உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் 5-வது வார்டு, 7-வது வார்டு ஆகியவை தாழ்த்தப்பட்டவர்கள் பெண்களுக்கும், 6,8,9 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டவர்கள் பொது பிரிவுக்கும், 1,2,3,4,13,15,17,18 ஆகியவை பெண்கள் பொது பிரிவினருக்கும், 10, 11, 12, 14, 16,19 ஆகிய வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 5, 10 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும், 11-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 3, 4, 6, 7 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், 1,2,8,9,12 ஆகிய வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 7,8 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும், 1-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 2,4,6,9,12 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், 10, 13,3, 5, 11 ஆகிய வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் 9-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பெண்கள் பிரிவுக்கும், 2-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 1,4,5,8,11 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், 3,6,7,10 ஆகிய வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் 4,6 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்கள் பிரிவுக்கும், 8,10 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 5,9,12, 13, 14, 15 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், 1, 2, 3, 7, 11 ஆகிய வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 9-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பெண்கள் பிரிவுக்கும், 4-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 2, 3, 6, 7 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், 1, 5, 8, ஆகிய வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 7-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பெண்கள் பிரிவுக்கும், 8-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 2, 3, 4, 5 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், 6,10, 1, 9 ஆகிய வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் 13-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பெண்கள் பிரிவுக்கும், 11, 12-வது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கும், 2, 3, 4, 7, 9, 10 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது பிரிவுக்கும், 1, 5, 8, 6 ஆகிய வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5, 11-வது வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்கள் பிரிவுக்கும், 1-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 4, 8, 9, 10, 12 ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுவுக்கும், 6, 13, 2, 3, 7 ஆகிய வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 8-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும், 7-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 1, 4, 6 ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுவுக்கும், 2,5, 3 ஆகிய வார்டுகள் பொதுவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் 9, 21, 26 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும், 5, 8, 20 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 1, 7, 10, 12, 13, 14, 17, 19, 22, 25 ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுவுக்கும், 6, 11, 15, 16, 18, 23, 24, 2, 3, 4 ஆகிய வார்டுகள் பொதுவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் 6-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும், 9, 12 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 1, 3, 4, 5, 11 ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுவுக்கும், 2, 7, 8, 10 ஆகிய வார்டுகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 5-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும், 3-வது வார்டு தாழ்த்தப்பட்டோர் பொதுவுக்கும், 1, 2, 4, 7 ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுவுக்கும், 6, 8, 9 வார்டுகள் பொதுவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.