ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து விவசாயிகள் தொடர் முழக்க போராட்டம்
செம்பனார்கோவிலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
பொறையாறு,
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் பரசலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில் சங்க நாகை மாவட்ட தலைவர் வீரராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கோஷங்கள்
போராட்டத்தின்போது, டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் மத்திய அரசு அனுமதித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு வேதாந்த குழுமத்திற்கும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் அனுமதித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் தங்கசாமி, ஒன்றிய செயலாளர் வேதநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தை சேர்ந்த குமார் நன்றி கூறினார்.