குலசேகரன்பட்டினம் அருகே மாணவி தீக்குளித்து தற்கொலை படிப்பை பாதியில் நிறுத்தியதால் பரிதாபம்

குலசேகரன்பட்டினம் அருகே படிப்பை பாதியில் நிறுத்தியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-06-03 22:30 GMT
குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் அருகே உள்ள சமத்துவநகரை சேர்ந்தவர் முருகன். இவரின் மனைவி மாடத்தியம்மாள். இவர்களுக்கு கார்த்தீசுவரி (வயது 17) உள்பட 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். கார்த்தீசுவரி குலசேகரன்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் முருகன் கார்த்தீசுவரியை பிளஸ்-1 படிக்கும் போதே பாதியில் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தொடர்ந்து படிக்க முடியாத ஏக்கத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் கார்த்தீசுவரி அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் ஆறுமுகம் வீட்டில் இருந்த போது, தனது உடம்பில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கார்த்தீசு வரியை மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்