ஏரல் அருகே இளம் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
ஏரல் அருகே நடந்து சென்ற இளம்பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஏரல்,
ஏரல் அருகே தீப்பாச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆத்திப்பழம். இவரின் மனைவி பத்மநித்யா (வயது 32). இவர் அகரம் அருகே உள்ள பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலையில் அகரம் பாலத்தில் இருந்து ஊருக்குள் வரும் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். திடீரென்று மோட்டார் சைக்கிளை பத்மநித்யா அருகில் செலுத்தியவாறு, அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை ஒருவன் பறித் தான். பதறிப்போன அவர் திருடன்...திருடன் என கத்தினார். ஆனால் அந்த மர்ம நபர்கள் 5 பவுன் சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி அப்பகுதியில் இருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து அவர் ஏரல் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றார்.