இன்று பள்ளிகள் திறப்பு: கரூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
இன்று பள்ளிகள் திறக்கப்பட இருப்பதையொட்டி, கரூர் மாவட்டத்திற்கு கோடைவிடுமுறையையையொட்டி உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்தவர்கள் உள்ளிட்டோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கரூர் ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்ததால் வழக்கத்தை விட அங்கு கூட்டம் அலைமோதியது.
கரூர்,
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்டவை ஜூன் 3-ந்தேதி (அதாவது இன்று) திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனவே சமூகவலைதளங்களில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுகிற என்பன போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு முதல் நாளிலேயே புத்தகங் களை வினியோகிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளுக் கும் புத்தகங்கள் கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன. மேலும் இந்த ஆண்டு முதல் முறையாக தொடக்க பள்ளிகளில் எல்.கே.ஜி.-யு.கே.ஜி. வகுப்புகளை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்த வகுப்புகளில் சேர்ந்த குழந்தைகளுக்கு வகுப்பறை ஏற்படுத்தி கொடுப்பது உள்ளிட்ட பணிகளில் கல்வித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு கோடை விடுமுறையில் உறவினர்களை பார்ப்பதற்காகவும், திருவிழாக்களில் கலந்து கொள்வதற்காகவும் வந்திருந்தவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று புறப்பட்டு சென்றதை காண முடிந்தது. பஸ் கட்டணத்தை விட ரெயில் டிக்கெட் கட்டணம் சற்று குறைவாக இருப்பதால் குடும்பத்துடன் செல்வதற்கு ரெயில் போக்குவரத்தையே பெரும்பாலா னோர் நாடினர். இதன் காரணமாக கரூர் ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. கரூர் வழியாக இயக்கப்படும் கோவை-நாகர்கோவில், ஈரோடு-நெல்லை, திருச்சி-சேலம் உள்ளிட்ட பயணிகள் ரெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதையொட்டி அங்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில்வே போலீசார் நடைமேடைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்தனர்.
கரூரில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வெளியூர்களுக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முன்பதிவில்லா டிக்கெட் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. கரூர் ரெயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் விற்பனை மூலம் ரெயில்வேக்கு ரூ.6 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக மற்ற நாட்களில் டிக்கெட் விற்பனை இவற்றை விட சற்று குறைவாக காணப்படும் என்றனர். இன்னும் தனியார் பள்ளிகள் உள்ளிட்டவை விரைவில் திறக்கப்பட இருப்பதால் வரும் நாட்களில் கரூர் ரெயில் நிலையத்தில் கூட்டம் சற்று அதிகரிக்கும். எனவே கரூர் வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.