சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வை 1,152 பேர் எழுதினர் கலெக்டர் ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வை 1,152 பேர் எழுதினர். தேர்வு மையங்களை கலெக்டர், தேர்வு பார்வையாளர் ஆகியோர் தேர்வு மையங் களை ஆய்வு செய்தனர்.
வேலூர்,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட 26 பணிகளை உள்ளடக்கிய சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. இந்தாண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், கோவை ஆகிய மாவட்டங் களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. முதல் நிலை தேர்வு 2 தாள் களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை முதல் தாளும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை 2-ம் தாளும் நடத்தப் பட்டது.
வேலூர் மாவட்டத்தில் ஊரீசு மேல்நிலைப் பள்ளி, ஊரீசு கலைக் கல்லூரி, ஈ.வெ.ரா. நாகம்மை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, என்.கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி, டி.கே.எம். மகளிர் கலைக் கல்லூரி ஆகிய 5 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
4 கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளிகள், 2 உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி கள் என சேர்த்து மொத்தம் 2,119 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித் திருந்தனர். அவர்களில் 1,152 பேர் தேர்வு எழுதினர். 967 பேர் தேர்வு எழுத வர வில்லை.
தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேர்வினை மாவட்ட கலெக்டர் ராமன், குடிமை தேர்வுகளின் பார்வையாள ரும், துணை ஆணைய ருமான (தொழில்கள் மற்றும் வணிகம்) பி.ராஜேஷ் ஆகி யோர் சென்று பார்வையிட் டனர்.
மேலும் அவர்கள் தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், கழிப்பறை, குடிநீர் வசதி ஆகியவை செய்யப் பட்டுள்ளதா? என்றும், அவசர மருத்துவ சிகிச்சை வச திகள் செய்யப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர்.