இன்று பள்ளிகள் திறப்பு: ரெயில்–பஸ்களில் கூட்டம் அலைமோதியது புத்தக பை விற்பனையும் மும்முரம்
இன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி ரெயில்–பஸ்களில் கூட்டம் அலைமோதியது. புத்தக பை விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று(திங்கட்கிழமை) அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தஞ்சையில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான நோட்டு, பேனா, புத்தக பை, பென்சில், ஷூ, செருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு பெற்றோர்களுடன் கடைகளுக்கு சென்றனர். அங்கு மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புத்தக பை உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது.
சீருடை வாங்குவதற்காக ஜவுளி கடைகளிலும் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பள்ளி விடுமுறைக்காக மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் தங்களது உறவினர்கள் வீடுகளுக்கு பெற்றோர்களுடன் சென்று இருந்தனர். பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி வெளியூர்களுக்கு சென்றவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால் ரெயில்கள், பஸ்களில் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக இருந்தாலும் கூட்டநெரிசலில் நின்றபடியே தங்களது குழந்தைகளை சொந்த ஊருக்கு பெற்றோர்கள் அழைத்து வந்தனர்.