பாந்திராவில் சண்டையை விலக்க முயன்றவர் குத்திக்கொலை கவுன்சிலர் கணவர் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு
பாந்திராவில் சண்டையை விலக்க முயன்றவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் கவுன்சிலரின் கணவர் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மும்பை,
பாந்திராவில் சண்டையை விலக்க முயன்றவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் கவுன்சிலரின் கணவர் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மோதல்
மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் ரபிக். இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக நடந்து வரும் கட்டுமான பணிகள் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பான ஒரு வீடியோவில் ரபிக் அந்த பகுதி பெண் கவுன்சிலருக்கும் சட்டவிரோத கட்டுமான பணிகளில் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார்.
இது தொடர்பாக அந்த பெண் கவுன்சிலரின் கணவரும், எம்.ஐ.எம். கட்சி பிரமுகருமான சலீம் குரேசிக்கும், ரபிக்குக்கும் இடையே சம்பவத்தன்று மோதல் ஏற்பட்டது.
7 பேர் கைது
2 தரப்பினரும் சண்டை போட்டபோது, அந்த பகுதியை சேர்ந்த பாபு பாய் என்ற சேக் ஜாபர்(வயது56) என்பவர் சண்டையை விலக்க முயன்றார். அப்போது, அவர் மீது மோதலில் ஈடுபட்டவர்கள் கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பி.கே.சி. போலீசார் கவுன்சிலரின் கணவர் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை கைது செய்து உள்ளோம். 8 பேரை தேடி வருகிறோம், என்றார்.