அலங்காநல்லூரில் பயங்கரம்: வீடு புகுந்து விவசாயி படுகொலை, 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
அலங்காநல்லூரில் வீடு புகுந்து விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 55). விவசாயியான அவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இளங்கோவன் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பாக அமர்ந்திருந்தார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர். திடீரென்று அவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இளங்கோவனை சுற்றி வளைத்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் ஓடினார்.
பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வீடு புகுந்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு, மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த இளங்கோவன் உயிருக்கு போராடினார்.
இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இளங்கோவன் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி இளங்கோவன் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்னதாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைத்து சோதனை செய்தனர். தடயங்களையும் சேகரித்தனர். கொலையாளிகள் குறித்து அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஏற்பட்ட விரோதத்தால், இந்த படுகொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.