விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகளின் குறைதீர்நாள் கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற்றது.

Update: 2019-06-01 22:30 GMT
காஞ்சீபுரம்,

கூட்டத்தில் லத்தூர் வட்டம் அணைக்கட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த காஞ்சீபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக அலுவலர், அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு தற்போது அறுவடை முடிந்து விட்டதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்ற தகவலை பதிவு செய்தார்.

மாவட்டத்தில் பல பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அதனை சரிசெய்ய போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கலெக்டர் பொன்னையா, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருவ மழை குறைந்த அளவு பெய்ததால், மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய மாவட்டத்தில் இந்த ஆண்டு அதிக அளவு கிணறுகளை ஆழப்படுத்தவும், நிதி செலவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு இழப்பீடு பணத்தை விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனம் உடனடியாக வழங்க ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, மண்டல கூட்டுறவு துறை இணை பதிவாளர் சந்திரசேகர், வேளாண்மை இணை இயக்குனர் கோல்டி பிரேமாவதி, காஞ்சீபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்