ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி நாகுடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கி அருகே நாகுடியில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி,
அறந்தாங்கி அருகே நாகுடியில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாதவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் விவசாய நிலங்களை பாதுகாக்கவும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேட்டூரில் டெல்டா விவசாயிகள் நெல் சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.