குருபரப்பள்ளி அருகே மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து ராணுவ வீரர் பலி

குருபரப்பள்ளி அருகே விடுமுறையில் ஊருக்கு வந்தபோது மோட்டார்சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து ராணுவ வீரர் பலியானார்.

Update: 2019-06-01 22:45 GMT
குருபரப்பள்ளி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொள்புதூர் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் பிரதீப் (வயது 27). ராணுவ வீரர். ஜம்மு-கா‌‌ஷ்மீரில் பணிபுரிந்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மோட்டார்சைக்கிளில் குருபரப்பள்ளிக்கு வந்தார்.

பின்னர் அவர் இரவு 7 மணி அளவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலை அமைப்பதற்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பிரதீப்புக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரதீப் பரிதாபமாக இறந்தார். விபத்தில் பலியான பிரதீப்புக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகிறது.

இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்