5 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது 12 புரசபைகளில் காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை 2-ல் ஜனதா தளம் (எஸ்) வெற்றி
12 புரசபைகளில் காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது. 5 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது. ஜனதா தளம் (எஸ்) கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு,
12 புரசபைகளில் காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது. 5 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது. ஜனதா தளம் (எஸ்) கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
12 புரசபைகளில் காங்கிரஸ்
நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 32 புரசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 30 புரசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இதில், 12 புரசபைகளில் காங்கிரசும், 5 புரசபைகளில் பா.ஜனதாவும், 2 புரசபைகளில் ஜனதா தளம் (எஸ்) கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 11 புரசபைகளில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்குநிலை ஏற்பட்டுள்ளது.
பட்டண பஞ்சாயத்து
அந்த புரசபைகளில் சுயேச்சைகள் ஆதரவை பெற்று காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து நிர்வாகத்தை கைப்பற்றும் என்று தெரிகிறது.
அதே போல் 21 பட்டண பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 19 பட்டண பஞ்சாயத்துகள் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 3 பட்டண பஞ்சாயத்துகளிலும், பா.ஜனதா 8 பட்டண பஞ்சாயத்துகளிலும் தனிப்பெரும்பான்மை பெற்று நிர்வாகத்தை கைப்பற்றியுள்ளன.
தொங்குநிலை
மீதமுள்ள 8 பட்டண பஞ்சாயத்துகளில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், தொங்குநிலை ஏற்பட்டுள்ளது. அந்த இடங்களில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைத்து நிர்வாகத்தை கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.