பரமத்திவேலூரில் நின்று கொண்டிருந்த சரக்கு வேன்கள் மீது பஸ் மோதி கிளீனர் சாவு 6 பேர் படுகாயம்

பரமத்தி வேலூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வேன்கள் மீது பஸ் மோதி கிளீனர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-05-31 22:00 GMT
பரமத்திவேலூர்,

கரூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு நூல்பாரம் ஏற்றிக்கொண்டு இரண்டு சரக்கு வேன்கள் வந்துள்ளது. இதில் முன்னால் சென்ற சரக்கு வேனின் முன்சக்கரம் பஞ்சாராகியுள்ளது. இதனால் அந்த வேனை நிறுத்தி சக்கரத்தை மாற்றும் பணியில் இரண்டு வேன் டிரைவர்கள், கிளீனர் மற்றும் சுமை தூக்குவோர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கரூரில் இருந்து ராயவேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று நின்று கொண்டிருந்த சரக்கு வேன்களின் மீது மோதியுள்ளது. இதில் பள்ளிபாளையம் அருகே உள்ள எஸ்.பி.பி. காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கிளீனர் விக்னே‌‌ஷ் (வயது 22) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதில் சரக்கு வேனின் டிரைவர் சங்கர் (42), சுமைதூக்கும் தொழிலாளர் வடிவேல், ரமே‌‌ஷ், சக்திவேல், கோபி ஆகியோரும், அரசு பஸ் டிரைவர் விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகிய 6 பேரும் படுகாயமடைந்து, பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்