பிரம்ம குமாரிகள் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை சென்டிரல் ரெயில் நிலைய இயக்குனர் குகணேசன் தொடங்கிவைத்தார்.
சென்னை,
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலயம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை சென்டிரல் ரெயில் நிலைய இயக்குனர் குகணேசன் தொடங்கிவைத்தார். சென்டிரல் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் புகையிலை பற்றிய கண்காட்சி மற்றும் இலவச ராஜயோக தியான பயிற்சி அரங்கு ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள மூர்மார்க்கெட் முனைய கட்டிடத்தில் புகையிலை, போதை பழக்கத்தினால் ஏற்படும் குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது.
பின்னர் அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள், பயணிகள் உள்ளிட்டோர் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ரெயில் பயணிகளுக்கு புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டது.