பிரபல பாடகர் போல் போலி முகநூல் மூலம் மோசடி, கோவையில் கைதான பட்டதாரி வாலிபரிடம் இளம்பெண்களின் ஆபாச படங்கள் - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
பிரபல பின்னணிபாடகர்போல் போலி முகநூல் தொடங்கி மோசடி செய்து கைதான வாலிபரிடம், இளம்பெண்களின்ஆபாச படங்கள்சிக்கியுள்ளது. அவரதுகையடக்க கணினியைகைப்பற்றி போலீசார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர்மகேந்திரவர்மன் (வயது 30),பி.எட். படித்துள்ளார். இவர் நூதன முறையில் இளம்பெண்களிடம் மோசடி செய்து பணம்சம்பாதிக்க திட்டமிட்டார். பிரபலஇந்தி பின்னணி பாடகர்அர்மான்மாலிக் பெயரில்போலி முகநூல் தொடங்கினார்.அர்மான்மாலிக்கின் இசை ஆல்பங்கள் மற்றும் அவரது அழகிய புகைப்படங்களையும் போலி முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார். அதன்பின்னர் இளம்பெண்களுக்கு முகநூல்நண்பராக பழகவருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்தமுகநூலை பார்த்தஇளம்பெண்கள் பலர்,அர்மான்மாலிக்தான்அழைப்புவிடுப்பதாக கருதி, முகநூல் நண்பர்களானார்கள். பின்னர் அந்த இளம்பெண்களின் செல்போன்எண்களை பெற்றுவாட்ஸ்-அப் மூலமும்பழக தொடங்கினார்.
சில இளம்பெண்களிடம் அவர்களதுஅந்தரங்க படங்களைஅனுப்புமாறும் கூறினார். இதனை நம்பிய இளம்பெண்கள் தங்கள் தொடர்பான படங்களை அனுப்பினார்கள்.இந்த படங்களைமுகநூல் பக்கத்தில்பதிவிடப்போவதாகவும், சிலரது படங்களை மார்பிங் செய்துபதிவிடப்போவதாகவும்கூறி மிரட்டி இளம்பெண்களிடம் பணம்வசூலிக்க தொடங்கினார்.
பாதிக்கப்பட்டகோவையை சேர்ந்தஇளம்பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார்மகேந்திரவர்மனை கைதுசெய்தனர். போலீசில் மகேந்திரவர்மன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் பயிற்சி படித்து முடித்துவேலை கிடைக்காததால்வருமானமின்றி தவித்து வந்தேன். அப்போதுதான் இணையதளம் மூலம்இந்தி பின்னணி பாடகர்அர்மான்மாலிக் குறித்துதெரிந்துகொண்டேன். அவரது பெயரில் முகநூல் கணக்குதொடங்கி பெண்களைஏமாற்றி பணம்பறிக்கலாம்என திட்டம்தீட்டி அதன்படி போலி முகவரியுடன் முகநூல் தொடங்கினேன். எனக்கு ஆங்கிலம்,இந்தி சரளமாகபேசவரும். முகநூலில் இணைந்த பெண்களிடம் ஆங்கிலத்திலும், இந்தியிலும் பேசி அவர்களை எனது வலையில் விழவைத்தேன்.
அழகான பெண்களை மட்டுமே தேர்வு செய்து அவர்களது படங்களைஆபாச படங்களாக சித்தரித்துஇணையதளத்தில்வெளியிட்டுவிடுவதாக கூறி பணம்பறித்தேன். இப்போது போலீசில்சிக்கி கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கைதான மகேந்திரவர்மனிடம்கையடக்க கணினி(டேப்) இருந்தது.அதனை போலீசார்கைப்பற்றினார்கள். அதில் ஏராளமான இளம்பெண்களின்ஆபாச படங்கள்மற்றும் மார்பிங் செய்யப்பட்டஆபாச படங்கள்இருந்துள்ளது. மேலும் இளம்பெண்களின் போன் எண்கள் உள்ளிட்ட விவரங்களும் இருந்தன.இவற்றை கைப்பற்றி போலீசார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகேந்திரவர்மனை, மீண்டும் போலீஸ் காவலில் எடுத்துவிசாரிக்க போலீசார்திட்டமிட்டு உள்ளனர்.இதுதொடர்பாக கோவைமாவட்ட குற்றப்பிரிவுபோலீஸ்சார்பில் கோர்ட்டில்மனுதாக்கல்செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.