பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் கும்பகோணம் இடம்பெற நடவடிக்கை அனைத்து வணிகர் சங்கத்தினர் வலியுறுத்தல்

பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் கும்பகோணம் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து வணிகர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.;

Update: 2019-05-30 22:30 GMT
கும்பகோணம்,

கும்பகோணத்தில் அனைத்து வணிகர் சங்க அமைப்புகளின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். சோழ மண்டல கணினி விற்பனையாளர்கள் சங்க தலைவர் ராமநாதன், ஜவுளி வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றார்.

கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமலிங்கம் கலந்து கொண்டார். இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் தமிழழகன், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் ராஜாராமன், ரெயில் உபயோகிப்பாளர் சங்க மாவட்ட ஆலோசகர் கிரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டமைப்பின் பொருளாளர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

முன்னதாக ராமலிங்கத்திடம், அனைத்து வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் கும்பகோணம் இடம்பெற வேண்டும். விழுப்புரம் முதல் தஞ்சை வரை மெயின் லைன் ரெயில் பாதையில் மின் மயமாக்கல் ஆகிய பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இயக்கப்படாமல் உள்ள சென்னை தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா விரைவு ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்