விபத்தில் கால்களை இழந்த ஆம்னி பஸ் டிரைவருக்கு இழப்பீடு கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விபத்தில் கால்களை இழந்த ஆம்னி பஸ் டிரைவருக்கு, இழப்பீடு கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
திருச்சியை சேர்ந்தவர் கென்னடிஜோசப். இவர், திருச்சியை மையமாக கொண்டு இயங்கும் ஆம்னி பஸ் ஒன்றில் பெங்களூரு-புதுக்கோட்டை இடையே ஓடும் வழித்தடத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி ஆம்னி பஸ்சில் மாற்று டிரைவராக பணியாற்றினார்.
திருச்சி அருகே பஸ் வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கென்னடிஜோசப்பின் இரு கால்களும் முறிந்தன. தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, குடும்பத்தினர் ரூ.8 லட்சம் வரை செலவு செய்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும், முட்டுக்குகீழ் கால்கள் துண்டானதால் அவரால் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால், ஆம்னி பஸ் நிர்வாகம் பாதிக்கப்பட்ட கென்னடி ஜோசப்பிற்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட டிரைவருக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர் சங்கம்(சி.ஐ.டி.யு) சார்பில் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் வீரமுத்து, தனியார் பஸ் ஓட்டுனர் சங்க நிர்வாகி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கென்னடி ஜோசப்பின் மனைவி புளோரிடா, மகன்கள் டேவிட்சன், தஸ்வின் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட செயலாளர் வீரமுத்து கூறுகையில், ‘பஸ் டிரைவர்கள் உயிரை பணையம் வைத்து தான் பணி செய்கிறார்கள். விபத்து நேர்ந்தால் உரிமையாளர் அந்த வாகனத்தை மட்டும் எடுத்து சென்று விடுகிறார்கள். பாதிக்கப்பட்ட டிரைவருக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. எனவே, தொழிலாளர் நலத்துறை இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ் நிர்வாகம் ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்கிட உதவ வேண்டும். அரசு ரூ.5 லட்சம் நிதி வழங்கிட வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட டிரைவரை உடல் ஊனமுற்றவராக கருதி மாத உதவித்தொகை ரூ.1,500 வழங்கிட வேண்டும்” என்றார்.