பர்கூர் பெண் கொலை வழக்கு: ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் முகாமிட்டு போலீசார் தீவிர விசாரணை
பர்கூரில் பெண் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் முகாமிட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடி கூட்டு ரோடு கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மர்ம நபர்கள் அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்து உடலை சாலையோரத்தில் வீசி சென்றனர். இதையடுத்து கொலையுண்ட பெண்ணின் உடலை பர்கூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட பெண் யார்? என்று கண்டுபிடிக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டுள்ளார். அவருடைய உத்தரவின் பேரில் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் திருப்பதி, அமரன் மற்றும் போலீசார் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவர்கள் கொலையுண்ட பெண்ணின் புகைப்படத்துடன் துண்டுபிரசுரங்களை அச்சடித்து தமிழக, கர்நாடக, ஆந்திர மாநில போலீஸ் நிலையங்களுக்கு வழங்கி உள்ளனர். மேலும் பெண் காணாமல் போனதாக வழக்கு எதுவும் பதிவாகி உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். தனிப்படை போலீசார் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
கொலையுண்ட பெண் நீல நிற சுடிதார் அணிந்திருந்தார். காலில் கருப்பு கயிரும், கழுத்தில் கருப்பு மணியும் கட்டி இருந்தார். அவர் தமிழகத்தை சேர்ந்தவரா அல்லது பக்கத்து மாநிலங்களான கர்நாடகா அல்லது ஆந்திராவை சேர்ந்தவரா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இதற்காக ஆந்திர மாநிலம் குப்பம் சுற்று வட்டார பகுதிகளிலும், கர்நாடக மாநில பகுதிகளிலும் யாரேனும் காணாமல் போய் உள்ளார்களா? என விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொலையுண்ட பெண்ணின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் பிடிபடுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.