தாராவி சீரமைப்பு திட்டத்துக்காக ரெயில்வே நிலம் ரூ.800 கோடிக்கு வாங்கப்படுகிறது
தாராவி சீரமைப்பு திட்டத்துக்காக ரெயில்வேக்கு சொந்தமான 46 ஏக்கர் நிலம் ரூ.800 கோடிக்கு மாநில அரசு வாங்குகிறது.
மும்பை,
தாராவி சீரமைப்பு திட்டத்துக்காக ரெயில்வேக்கு சொந்தமான 46 ஏக்கர் நிலம் ரூ.800 கோடிக்கு மாநில அரசு வாங்குகிறது.
தாராவி சீரமைப்பு திட்டம்
ஆசியாவின் பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியை குடிசையில்லா பகுதியாக மாற்ற கடந்த 15 ஆண்டுகளாக மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணியை செய்வதற்கு 2 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளது. இருப்பினும் தாராவி சீரமைப்பு பணியை செய்வதற்கு எந்த நிறுவனமும் நியமிக்கப்படவில்லை.
இதற்கிடையே தாராவி சீரமைப்பு திட்டப்பணிக்கு ரெயில்வேக்கு சொந்தமான 107 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கோரியது. ஆனால் ரெயில்வே 46 ஏக்கர் நிலத்தை மட்டுமே தருவதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளது.
ரெயில்வே இடத்துக்கு ரூ.800 கோடி
கடந்த பிப்ரவரி மாதம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அப்போதைய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ரெயில்வே நில மேம்பாட்டு ஆணையம் மற்றும் தாராவி மேம்பாட்டு ஆணையம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரெயில்வே கொடுக்கும் இடத்தில், சீரமைப்பு திட்டத்தின் போது வீடுகளை இழக்கும் 30 ஆயிரம் குடும்பத்தினருக்கு டிரான்சிட் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. ரெயில்வே இடத்தை வாங்குவதற்கு ரெயில்வே நில மேம்பாட்டு ஆணையத்துக்கு மாநில அரசு ரூ.800 கோடி கொடுக்கிறது.
இதில், மகாடா தனது பங்களிப்பாக ரூ.200 கோடியும், குடிசை மறுசீரமைப்பு ஆணையம் ரூ.300 கோடியும் கொடுக்கின்றன.