சீரான மின்சாரம் வினியோகிக்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மின்சாரம் சீராக வினியோகிக்க கோரி நேற்று தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2019-05-29 22:45 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் அனுமார் கோவில் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக அந்த பகுதிக்கு மின்சாரம் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 2 முறை புகார் மனு கொடுத்தும், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மின்சாரம் சீராக வினியோகிக்க கோரி நேற்று தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்