வானவில் : இசுசூ வழங்கும் ‘டிசர்வ்’ சலுகை

பிக் அப் டிரக் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் இசுசூ நிறுவனம் தனது டிமேக்ஸ் ரெகுலர் மாடலானது ஒற்றை கேபின் பிக்கப் டிரக்காகும்.

Update: 2019-05-29 09:22 GMT
அதிக சக்தி மிக்க உலக அளவில் மிகச் சிறந்த செயல்பாட்டுக்கான ஸ்திரமான வாகனமாக இது விளங்குகிறது. இதில் இரண்டு வேரியன்ட்கள் (பிளாட் மற்றும் கேப்சேசிஸ்) வந்துள்ளன. வர்த்தக வாகனங்கள் பிரிவில் பிளாட் டெக் மாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கேப் சேஸிஸ் மாடலானது குளிர்பதன கன்டெய்னர் உள்ளிட்ட வர்த்தக போக்குவரத்துக்கு ஏற்ற மாடலாகத் திகழ்கிறது. சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பெருமளவில் கேப் சேஸிஸ் மாடலை விரும்புகின்றன. ரெகுலர் கேப் மாடலுக்கு அதிகபட்ச சலுகையை அறிவித்துள்ளது. ‘டிசர்வ்’ என்ற பெயரிலான இந்த சலுகை, ஜூன் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டிமேக்ஸ் வாகனங்களுக்கு 3 ஆண்டு அல்லது ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரையிலான இலவச பராமரிப்பு சேவை அளிக்கப்படும். தேய்மானம் அடையும் சில உதிரி பாகங்களும், உயவுப் பொருள்களும் இந்த இலவச பராமரிப்பு சேவையில் அடங்கும். இந்த திட்டம் மூலம் வாகனத்தின் மொத்த மதிப்பு அதிகரிக்க வழி ஏற்பட்டுள்ளது. டிசர்வ் சலுகைத் திட்டத்துக்காக வாடிக்கையாளர் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்த வாகனத்தைத் தேர்வு செய்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுவது நிச்சயம்.

மேலும் செய்திகள்