எரித்து கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது கணவரை பிடித்து போலீஸ் விசாரணை
பேரிகை அருகே எரித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது. இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே தீர்த்தம் செல்லும் சாலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிணமாக கிடந்தார். அவரது முகம் தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆடையில் காரிமங்கலம் என குறிப்பிட்டு தையல் கடை ஒன்றின் பெயர் இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:- கொலை செய்யப்பட்ட பெண் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பூனாத்தனஅள்ளியை சேர்ந்த நாகமணி என்கிற சுகுணா (வயது 27) என தெரிய வந்தது. அவரது கணவர் பெயர் சென்னப்பன். பெயிண்டர். இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் சென்னப்பன் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓசூர் அருகே தனது மனைவியை மோட்டார்சைக்கிளில் அழைத்து வந்த சென்னப்பன் அங்கு பேரிகை - தீர்த்தம் சாலையில் மனைவியின் தலையில் கல்லைப்போட்டும், கழுத்தை இறுக்கியும் கொலை செய்தார். இதன் பிறகு முகத்தை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக தீ வைத்து எரித்தது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக சுகுணாவின் கணவர் சென்னப்பனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.