கோவில்பட்டி நகரசபை பகுதியில் சுற்றித்திரிந்த 40 பன்றிகள் பிடிபட்டன காட்டுப்பகுதியில் விடப்பட்டன

கோவில்பட்டி நகரசபை பகுதியில் சுற்றித்திரிந்த 40 பன்றிகள் பிடிக்கப்பட்டன. அவை காட்டுப்பகுதியில் விடப்பட்டன.

Update: 2019-05-28 21:45 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி நகரசபை பகுதியில் சுற்றித்திரிந்த 40 பன்றிகள் பிடிக்கப்பட்டன. அவை காட்டுப்பகுதியில் விடப்பட்டன.

பன்றிகள்

கோவில்பட்டி நகரசபை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராகவும் பொது சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையிலும் தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் சார்பில் நகரசபை ஆணையாளர் அச்சையாவிற்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து அவரின் உத்தரவின் பேரில் கோவில்பட்டி நகரசபை துப்புரவு அலுவலர் இளங்கோ, துப்புரவு ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருப்பதி, முருகன் ஆகியோரின் மேற்பார்வையில் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், புதுக்கிராமம், வசந்தநகர், பாரதிநகர், வீரவாஞ்சி நகர், இளையரசனேந்தல் ரோடு ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த 40 பன்றிகள் பிடிக்கப்பட்டு அவைகள் காட்டு பகுதியில் விடப்பட்டன.

எச்சரிக்கை

இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் நகரசபை பகுதியில் பன்றிகள் வளர்ப்பவர்கள் பன்றிகளை தெருக்களில் திரிய விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

மீறி தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகள் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பிடித்து அப்புறப்படுத்தப்படும் என நகரசபை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்