அம்மாப்பேட்டை அருகே கரும்பு தோட்டம் தீயில் எரிந்து நாசம் போலீசார் விசாரணை
அம்மாப்பேட்டை அருகே கரும்பு தோட்டம் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலியமங்கலம்,
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள அருந்தவபுரம் கடைத் தெருவை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது52). இவருக்கு சொந்தமாக தோப்புத்தெரு பகுதியில் 3½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு ஆலை கரும்பு தோட்டம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கரும்பு தோட்டத்தில் கரும்புகள் தற்போது அறுவடை செய்யும் பருவத்தில் இருந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் எதிர்பாராதவிதமாக கரும்பு தோட்டம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் தோட்டத்தில் இருந்த கரும்புகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 88 ஆயிரம் என கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கரும்பு தோட்டம் தீயில் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.