பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை

டி.பி.சத்திரத்தில், பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2019-05-27 23:15 GMT
சென்னை,

சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெயசந்திரன். இவருடைய மனைவி அருணா (வயது 44). இவர், கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் பணிக்கு செல்வதற்காக அருணா, வீட்டில் தனது அறையில் உடை மாற்ற சென்றார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. தட்டிப்பார்த்தும் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஜெயசந்திரன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு தனது மனைவி அருணா, தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அருணா நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் போலீஸ் அருணாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்