காங்கேயம் அருகே நிலத்தடிநீரை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
காங்கேயம் அருகே வீரணம்பாளையத்தில் நிலத்தடிநீரை விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டது. அந்த வகையில், காங்கேயம் வீரணம்பாளையம் படியாண்டிபாளையம் மற்றும் மிதிபாறை பகுதி ஊர் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் நாங்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக எங்கள் பகுதியில் பருவமழை பெய்யாததால் கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இருக்கும் குறைவான தண்ணீரையே பயன்படுத்தி வருகிறோம். எங்கள் பகுதிக்கு அருகிலேயே சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் தனியார் இடத்தில் கிணறும், ஆழ்குழாய் கிணறும் உள்ளது. இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் மற்றும் சிலர் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து லாரிகள், டிராக்டர்கள் மூலம் இரவு பகலாக தண்ணீரை உறிஞ்சி விற்பனைசெய்து வருகின்றனர். விவசாய மின் இணைப்பு பெற்று பெரிய அளவிலான மோட்டார்களை பொருத்தி இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எங்கள் பூமிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள், கிணறுகளில் உள்ள நீர்மட்டம் மேலும் குறைந்து வருகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீர் விற்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
நாம் தமிழர் கட்சியின் ஊழல் ஒழிப்பு பாசறையின் திருப்பூர் நிர்வாகிகள் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பாசறையின் நிர்வாகியின் மகள் பாண்டியன் நகரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். அவருடைய மாற்றுச்சான்றிதழை பெறும்படி சென்றபோது ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான கட்டணமான ரூ.1500-ஐ கட்டினால் மட்டுமே சான்றிதழ் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
மேலும், ஏற்கனவே மாணவியின் பெற்றோரிடம் இருந்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்து கொண்டு சான்றிதழை கொடுக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் அதிக கட்டணம் வசூலிக்கும் இந்த பள்ளி மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், மாற்றுச்சான்றிதழை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்திய ஜனநாயாக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் தெற்கு ஒன்றிய கமிட்டி நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் அவினாசி ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனம் பொருட்கள் வாங்க தனிநபர் கடன், தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கடன் வழங்கி வருகிறது. அவ்வாறு வழங்கப்பட்ட கடனின், வாராக்கடனை வசூல் செய்யும் பொறுப்பை தனியார் வசூல் முகவர்களிடம் இந்த நிறுவனம் ஒப்படைத்துள்ளது.
இதையடுத்து அந்த முகவர்கள் கடன் செலுத்த தாமதமாகும் வாடிக்கையாளர்களின் பணியிடங்களுக்கும், வீடுகளுக்கும் சென்று தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்து பேசுவதுடன், வசூலிக்க வரும் நபர்கள் குண்டர்கள் போன்று செயல்பட்டு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதனால் வன்முறையில் ஈடுபடும் முகவர்கள் மற்றும் அவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவன மேலாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.