கரூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் அலகு குத்தி வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அலகு குத்தி கொண்டும், காவடி எடுத்தும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.;
கரூர்,
கரூர் நகரில் வீற்றிருக்கும் மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத உற்சவ விழா கடந்த 12-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் பக்தர்களும் புனித நீர் எடுத்து வந்து கோவிலில் நீண்ட வரிசையில் நின்று கம்பத்திற்கு ஊற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். இதைத்தவிர மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை தொடங்கி நடந்தது. இதையொட்டி தேரினை சுற்றிலும் மாவிலை, இளநீர், பூக்கள் உள்ளிட்டவற்றால் அலங்காரம் செய்திருந்தனர். சரியாக காலை 7.05 மணியளவில் கோவிலிலிருந்து சிறப்பு அலங்காரத்துடன் கரூர் மாரியம்மன் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் ஓம் சக்தி... பராசக்தி... என கோஷமிட்டபடியே அம்மன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்தது.
சாமி தரிசனம்
வீதிகளில் தேர் வலம் வருவதையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு முன்பாக நீர் தெளித்து கோலமிட்டு வரவேற்றனர். மேலும் தாம்பூலக் கூடையில் வாழைப்பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து தேங்காய் உடைத்து வழிபட்டனர். மேலும் தேருக்கு முன்பாக இசை வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் அருகே இருந்து புறப்பட்ட தேர், வாங்கல் சாலை, ஆலம்மர தெரு உள்ளிட்ட தெரு வழியாக சென்று மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கரூர் நகரம் உள்பட பல்வேறு இடங்களிலிருந்தும் திரளானோர் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
நேர்த்திக்கடன்
மேலும் கோவிலிருந்து கம்பத்தினை ஊர்வலமாக எடுத்து சென்று பசுபதிபாளையம் ஆற்றில் விடும் நிகழ்வு நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதையொட்டி திருவிழாக்காலங்களில் விரதம் மேற்கொண்டு வந்த பக்தர்கள் நேற்று நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பசுபதிபாளையம் ஆற்றிலிருந்து புறப்பட்டு அக்னி சட்டி ஏந்தி கொண்டும், அலகு குத்தி கொண்டும், காவடி-பால்குடம் எடுத்து வந்தும், நாக்கில் வேலினை குத்தி கொண்டும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலை வந்தடைந்ததும் அம்மனை மனமுருக வேண்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். குழந்தைகளை கரும்பு தொட்டிலில் தூக்கி வந்தும்,
இதேபோல குழந்தை வரம் வேண்டி ஏற்கனவே வழிபாடு நடத்தியவர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். கரும்பு தொட்டிலில் குழந்தையை தூக்கி கொண்டு வந்து வழிபாடு செய்தனர். இதையொட்டி கரூர் ஜவகர்பஜாரின் கரும்பு கட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.150, ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் உடலில் உள்ள தீராத நோய்களை குணப்படுத்த வேண்டி உடல் முழுவதும் கரும்புள்ளி, செம்புள்ளிகளை குத்தி கொண்டும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தியதை காண முடிந்தது. சிலர் தங்களது உடலில் வாள்களை குத்தி கொண்டு வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தேரோட்டத்தையொட்டி ஜவகர்பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் வாட்டி, வதைக்கும் வெயிலுக்கு இதமாக நீர்மோர், சர்பத், பானகம் உள்ளிட்ட நீராகாரங்களும் வழங்கப்பட்டன. மேலும் வீதிகளில் பக்தர்கள் அலைகடலென திரண்டதால் இதனை பயன்படுத்தி பணம் திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை கண்டறிய போலீசார் தீவிரமாக கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கரூர் ஜவகர்பஜார் மற்றும் பசுபதிபாளையம் ஆற்றில் கம்பம் விடும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோவிலின் முன்புற பகுதியில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து, பக்தர்களை வரிசையாக அனுப்பி வைத்தனர். நேற்று மாலை 6.45 மணியளவில் கரூர் மாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) மாலை 5.15 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.