கடையின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் திருட்டு

இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

Update: 2019-05-27 22:15 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன்(வயது 45). இவர் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் உள்ள வேலாயுதம் நகரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.75 ஆயிரம் திருடுபோய் இருப்பது தெரிந்தது. பின்னர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரூ.75 ஆயிரத்தை திருடிசென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்