காசோலை மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு 2 ஆண்டு சிறை

காசோலை மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவில்பட்டி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-05-27 22:45 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சுப்புக்குட்டி. இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 35). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி காந்திநகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஆறுமுகம் (45) என்பவருக்கு ரூ.5 லட்சம் கடன் வழங்கினார்.

அந்த பணத்துக்காக ஆறுமுகம் கார்த்திகேயனிடம் ஒரு காசோலை கொடுத்தார். அந்த காசோலையில் உள்ள பணத்தை எடுப்பதற்காக கார்த்திகேயன் வங்கிக்கு சென்றார். அப்போது அந்த வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கார்த்திகேயன் கோவில்பட்டி விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. நேற்று நீதிபதி தாவூத்தம்மாள் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்துக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், ரூ.5 லட்சத்தை கார்த்திகேயனிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்