திருச்சி விமான நிலையத்தில் ரூ.6½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் இளம்பெண் சிக்கினார்.

Update: 2019-05-27 22:45 GMT
செம்பட்டு,

திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் இரவு மலேசியா புறப்பட தனியார் விமானம் ஒன்று தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த தஷ்பிகா ராணி (வயது 21) என்ற இளம்பெண் தனது கைப்பையில் அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த பணத்தை அதிகளவு வைத்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அந்த பணத்தை அவர் மலேசியாவுக்கு கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது. அதன்பேரில், அவரிடம் இருந்து 367 வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் இந்திய மதிப்பு ரூ.6 லட்சத்து 47 ஆயிரம் ஆகும். அந்த பெண்ணிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்