கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் 58 ஆயிரம் பேருக்கு விலையில்லா பாடப்புத்தகம் அதிகாரி தகவல்
கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் 58 ஆயிரம் பேருக்கு விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி பாப்பம்மாள் கூறினார்.
கும்பகோணம்,
தமிழக அரசு ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது. அதன்படி 2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த பாடப்புத்தகங்களை கும்பகோணம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது.
இதுகுறித்து கும்பகோணம் கல்வி மாவட்ட அதிகாரி பாப்பம்மாள் கூறியதாவது:-
58 ஆயிரம் பேர்
வருகிற 2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையொட்டி கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் 58 ஆயிரம் பேருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. தற்போது முதல் பருவத்துக்கு தேவையான புத்தகங்கள் வந்துள்ளன. வருகிற 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினமே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.