நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 945 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 945 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2019-05-27 22:30 GMT
நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இந்த கொள்முதல் நிலையங்களில் அறுவடை பருவத்தின்போது நெல் கொள்முதல் பணி விறுவிறுப்பாக நடைபெறுவது வழக்கம். கொள்முதல் செய்யப்பட்ட நெல் தேவைக்கேற்ப வெளி மாவட்டங்களில் உள்ள அரவை ஆலைகளுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 945 டன் சன்னரக நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கும் பணி நடந்தது.

திருச்சிக்கு...

இதையொட்டி அசேசம், ஆதனூர், தலையாமங்கலம், இடையர்நத்தம், தெற்கு நத்தம், மூவாநல்லூர் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்கள், சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை ஆகிய இடங்களில் இருப்பு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் 75 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அதைத்தொடர்ந்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் அடுக்கி வைத்தனர். பின்னர் நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.

சிவகங்கைக்கு...

அதேபோல் பேரளத்தில் இருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு 930 டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக நெல் மூட்டைகள் வலங்கைமான், குடவாசல், கடகம்பாடி, திருவாரூர் ஆகிய பகுதியில் உள்ள சேமிப்பு மையங்களில் இருந்து பேரளம் ரெயில் நிலையத்துக்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டன. 

மேலும் செய்திகள்