ஆரணி நகராட்சி வளாகத்தில் கொழு கொழு குழந்தைகள் தேர்வு

‘புதிய பாரத மகள்கள்’ மூலம் செயல்படும் அங்கவன்வாடி பள்ளி சார்பாக கொழு கொழு குழந்தைகளுக்கான தேர்வு போட்டி ஆரணி நகராட்சி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடந்தது.

Update: 2019-05-27 22:30 GMT

ஆரணி, 

நிகழ்ச்சிக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பி.கலைச்செல்வி தலைமை தாங்கினார். அங்கன்வாடி பணியாளர்கள் ஜெயஸ்ரீ, சரளா, ரேணுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார மேற்பார்வையாளர் ஜி.புஷ்கலை வரவேற்றார். 

31 மையங்களில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கொழு கொழு குழந்தைகள் 60 பேர் கலந்து கொண்டனர். 

அதில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்