குரலைத் தேடும் செயற்கை அறிவு

நெருக்கடி நிறைந்த பொது இடங்களிலும், பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் மற்ற இரைச்சலுக்கு மத்தியில் குறிப்பிட்ட நபரின் குரலை பிரித்து அறிவது முக்கியமானதாகும். அது குற்றங்களை தடுக்கவும், ஆபத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவவும் பெரிதும் கைகொடுக்கும்.

Update: 2019-05-27 10:56 GMT
அன்னைக்கு, ஆயிரம் ஒலி இரைச்சலுக்கு மத்தியில் தனது குழந்தையின் சிணுங்கல், அழுகுரலை அடையாளம் காணும் ஆற்றல் இருப்பதாக சொல்வார்கள். அதுபோல பல்வேறு குரல்கள், சத்தங்களுக்கு இடையில் குறிப்பிட்ட ஒருவரின் குரலை பிரித்து அறிந்து கொள்ளும் செயற்கை அறிவு நுட்ப சாதனத்தை உருவாக்கி இருக்கிறது கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் பொறியாளர் குழு.

ஒவ்வொருவர் குரலுக்கும் சிறு வித்தியாசம் இருப்பதை நாம் அறிவோம். கைரேகைபோல இந்த ஒலிரேகை வித்தியாசத்தை துல்லியமாக பதிவு செய்து கூட்டம் மற்றும் இரைச்சலின் மத்தியில் குறிப்பிட்ட ஒருவரின் ஓலத்தை அல்லது கருத்தை பிரித்தறிந்து கொள்ள உதவுகிறது இந்த கருவி. பெரிய ஓட்டலில் எங்கிருந்து ஒருவர் ஆர்டர் கொடுக்கிறார் என்பதையும், இரைச்சல் ஏற்படும் பொது இடத்திலும் இந்த சாதனம் இயக்கி பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்