தோட்டக்கலை மற்றும் நர்சிங் படிப்புகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட படிப்புகளுக்கு இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

Update: 2019-05-27 10:35 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்படும் இந்த பல்கலைக்கழகத்தில் 2019- 20-ம் ஆண்டுக்கான இளம் அறிவியல் வேளாண்மை B.Sc., (Hons.) in Agriculture, இளம் அறிவியல் வேளாண்மை ((B.Sc., (Hons.) in Agriculture (Self Supporting), இளநிலை அறிவியல் தோட்டக்கலை (B.Sc., (Hons.) in Horticulture), பட்டயப் படிப்பு வேளாண்மை/தோட்டக்கலை, இளநிலை மருந்தாக்கியல் பட்டப்படிப்பு (B.Pharm.), இளநிலை அறிவியல் செவிலியர் (B.Sc., Nursing), இளநிலை இயற்பியல் சிகிச்சை, இளநிலை தொழில்முறை சிகிச்சை (BOT), இளநிலை மீன்வள அறிவியல் (B.F.Sc.) மற்றும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் 31-5-2019 வரை இணையதளம் வழியாக விண்ணப்பம் பதிவு செய்யலாம். விரிவான விவரங்களை www.annamalaiuniversity.ac.in என்ற இணைய தளத்தை பார்க்கலாம்.

மேலும் செய்திகள்