கோர்ட்டுகளில் வேலை
காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
கணினி இயக்குபவர், நகல் பரிசோதகர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், இளநிலை கட்டளை நிறைவேற்றுநர், ஒளிப்பட நகல் எடுப்பவர், ஓட்டுனர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 137 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பலதரப்பட்ட படிப்புகளை முடித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, மாவட்ட நீதிமன்ற முகவரிக்கு 31-5-2019-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் பதிவு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
மற்றொரு அறிவிப்பின்படி இரவுக்காவலாளி உள்ளிட்ட பணிகளுக்கு 22 பேரை தேர்வு செய்யவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு ஜூன் 3-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இவை பற்றிய விவரங்களை https://districts. ecourts.gov.in/kanchipuram என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
இதேபோல சென்னை மாவட்ட நீதிமன்றத்தில், ஜெராக்ஸ் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 73 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. இந்த பணிகளுக்கு ஜூன் 4-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரத்தை https ://districts. ecourts.gov.in/chennai என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.