நெய்தலூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
நெய்தலூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நச்சலூர்,
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே நெய்தலூரில் பிரசித்தி பெற்ற கோட்டைமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் வைகாசி திருவிழா நேற்று கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக திரளான பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக மேளதாளத்துடன் கோவிலுக்கு வந்தனர்.
மேலும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி கொண்டும் கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோட்டைமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஊர்முக்கியஸ்தர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிடா வெட்டு பூஜை
தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) மாவிளக்கு, கிடா வெட்டு பூஜையும், மாலையில் கழுகு மரம் ஏறுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) கரகம் ஆற்றில் விடுதல், மஞ்சல் நீராடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.