ஓசூர், சூளகிரி பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

ஓசூர், சூளகிரி பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் கார் மற்றும் வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்தது.

Update: 2019-05-26 22:30 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல மழையின் வேகம் அதிகரித்து இடி, மின்னலுடன் பலத்தமழை பெய்தது. மேலும் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதியில் தேங்கி நின்றது.

பலத்த மழையின் காரணமாக சூளகிரி அருகே அனாசந்திரம் கிராமத்தில் வேப்பமரம் ஒன்று வீடு மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது முறிந்து விழுந்தது. இதில், வீட்டின் மேல் பகுதி மற்றும் கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன.

சூளகிரி அருகே உலகம் கிராமத்தில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ஓசூரிலும் சுமார் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது. சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், ஓசூர் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதனிடை யே நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- தளி- 20, ஓசூர்-18.30, சூளகிரி-15, தேன்கனிக்கோட் டை- 10, ராயக்கோட்டை-3,

மேலும் செய்திகள்