ஸ்ரீவைகுண்டம் அருகே தொழிலாளி கொலை: மேலும் ஒருவர் கைது
ஸ்ரீவைகுண்டம் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 27). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியன் (38) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் தங்கப்பாண்டி தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். ஊருக்கு அருகே வல்லக்குளம் ரோட்டில் வந்தபோது அங்கு சென்ற சுப்பிரமணியன் மற்றும் அவருடைய உறவினர்கள் ஊய்க்காட்டான் (21), சுந்தரம் (28), கார்த்திக் (27) ஆகியோர் தங்கப்பாண்டியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இதுகுறித்து சேரகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஊய்க்காட்டான், சுந்தரம், கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்தனர். சுப்பிரமணியனை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.