தென் மாநிலங்களை பா.ஜனதா ஒதுக்கிவிட முடியாது - வைத்திலிங்கம் நம்பிக்கை

தென் மாநிலங்களை பாரதீய ஜனதாவால் ஒதுக்கிவிட முடியாது என்று வைத்திலிங்கம் கூறினார்.

Update: 2019-05-24 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை எம்.பி. தேர்தலில் வெற்றிபெற்ற வைத்திலிங்கம் நேற்று காலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அருணிடம் இருந்து வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டார். இதில் முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தனது வெற்றிக்கு பாடுபட்ட காங்கிரஸ், கூட்டணி கட்சியினருக்கு வைத்திலிங்கம் நன்றி தெரிவித்தார்.

அதன் பின்னர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது மக்கள் வைத்த மிகப்பெரிய நம்பிக்கையே இந்த தேர்தலில் எனது மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியினர் பெற்ற வெற்றி பெரிய அளவிலான வெற்றியாக இருந்தாலும் தென் மாநிலங்களில் அவர்களால் காலூன்ற முடியவில்லை. இதன் காரணமாக தென் மாநிலங்களை பாரதீய ஜனதா அரசால் ஒதுக்கிவிட முடியாது. புதுவை மாநிலத்துக்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்