வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் பாதுகாப்பு பணியில் 50 தீயணைப்பு வீரர்கள்

வாக்கு எண்ணும் மையத்தில் தீயணைப்பு வீரர்கள் 50 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் 24 மணி நேரம் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட் டுள்ளனர்.

Update: 2019-05-22 22:15 GMT
திருச்செங்கோடு, 

நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை 

எண்ணும் பணி இன்று (வியாழக்கிழமை) திருச்செங்கோடு 

விவேகானந்தா கல்லூரியில் நடைபெறுகிறது. இதையொட்டி 

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் 650 

போலீசார் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் 

ஈடுபட உள்ளனர்.

அதேபோல் வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் நாமக்கல் 

மாவட்ட தீயணைப்பு அலுவலர் அழகர்சாமி தலைமையில் 

தீயணைப்புத்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 

நேற்று மாலை 5 மணி முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு 

வருகின்றனர்.

இன்று வாக்கு எண்ணிக்கை விவரம் அறிவிக்கப்படும் வரை 

அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த 24 

மணி நேர பாதுகாப்பு பணியில் தீயணைப்பு நிலைய 

அலுவலர்கள் சிவக்குமார், கனகராஜ், பொன்னுசாமி உள்பட 

50 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி 3 தீயணைப்பு 

வாகனங்களும் வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் 

நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்