வாக்கு எண்ணும் மைய நுண்பார்வையாளர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு
கரூரில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றவுள்ள நுண்பார்வையாளர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் நடந்தது.
கரூர்,
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையிலான வி.வி.பேட் எந்திரங்கள் ஆகியவை வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணும் பணிக்காக ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்படுகின்றன. ஒவ்வொரு வாக்குகள் எண்ணும் மேஜைக்கும் ஒரு மேற்பார்வைாயளர், ஒரு உதவியாளர், ஒரு நுண்பார்வையாளர் என மூன்று நபர்கள் பணியில் இருப்பார்கள். வாக்கு எண்ணும் பணி மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளரால் மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தளவாபாளையம் மையத்தில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்குகின்றன. இதையொட்டி கரூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள வாக்கு எண்ணிக்கை நுண்பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் சட்டமன்றத்தொகுதிவாரியாக கணினி மூலம் குலுக்கல் முறையில்் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு தேர்தல் பார்வையாளர்களான ஸ்ரீஹரி பிரதாப் சாஹி, பிரசாந்த் குமார், டி.கே.வினித் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் வைத்து நடத்தினார். இந்நிழ்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் செல்வசுரபி (பொது), ரவிச்சந்திரன் (தேர்தல்), அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சி, காமராஜ் (மணப்பாறை), ராமு (வேடச்சந்துார்), கீதா (விராலிமலை), மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வாக்கு எண்ணும் பணியில் ஒவ்வொரு மேஜைக்கும் தேர்தல் நுண்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர் ஆகியோர் ஈடுபடுவார்கள். இவர்களில் ஒவ்வொரு பிரிவிற்கும் 102 நபர்கள் என 306 நபர்கள் எந்தெந்த சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் அறையில் பணியாற்ற வேண்டும் என்பதை முடிவுசெய்யும் வகையிலான கணினிமுறை குலுக்கல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்கள் எந்தெந்த வாக்கு எண்ணும் அறையில் எந்தெந்த மேஜையில் பணியாற்றவுள்ளார்கள் என்பதற்கான குலுக்கல் வாக்கு எண்ணும் நாளான நாளை (இன்று) காலை 5 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்திலேயே நடைபெறும். அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை 18 நுண்பார்வையாளர்கள், தலா 16 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் என மொத்தம் 80 நபர்களுக்கான குலுக்கலும் நடைபெறும் என தேர்தல் அதிகாரி அன்பழகன் தெரிவித்தார்.