நெல்லை நாடாளுமன்ற தொகுதியில், வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஷில்பா திடீர் ஆய்வு
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில், வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஷில்பா திடீர் ஆய்வு நடத்தினார்.
நெல்லை,
நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை நாளை(வியாழக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், நெல்லை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று கலெக்டர் ஷில்பா திடீரென ஆய்வு நடத்தினார்.
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து நாளை (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நேற்று காலையில் பயிற்சி மற்றும் ஒத்திகை நடந்தது. இந்த பயிற்சிக்கு வந்த ஊழியர்களை போலீசார் பலத்த சோதனைக்கு பிறகே பயிற்சி நடந்த இடத்துக்கு அனுமதித்தனர்.
இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று காலை 8 மணிக்கு கலெக்டர் ஷில்பா வந்தார். அவருடன் உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் வந்தனர். சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திர அறைகளின் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்களின் இயக்கம், வாக்கு எண்ணும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு வசதிகள் குறித்து கலெக்டர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

பின்னர் ‘விவிபேட்’ எந்திரங்களில் பதிவான வாக்கு சீட்டுகளை எண்ணி வைப்பதற்கான பெட்டிகளையும், தபால் ஓட்டுகளை எண்ணும் பெட்டியையும் அவர் பார்வையிட்டார். மேலும் சட்டசபை தொகுதி வாரியாக ஒட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்களையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வளைவுகளையும், பேரிகாட்களையும், தடுப்பு சுவர்களையும் அவர் பார்வையிட்டார். அப்போது கல்லூரி வளாகத்தில் புதர் மண்டி கிடந்ததை பார்த்த அவர், அதை உடனே அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
போக்குவரத்து மாற்றம்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நாளை (வியாழக்கிழமை) நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் 2019-ன் வாக்கு எண்ணும் பணியினை முன்னிட்டு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், மாநகரில் இருந்தும் திருவனந்தபுரம் சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் ரெட்டியார்பட்டி சாலையில் இடது புறமாக திரும்பி நான்கு வழிசாலை வழியாக செல்ல வேண்டும்.
இதே போல் திருவனந்தபுரம் சாலையில் இருந்து நெல்லை மாநகரத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் டக்கரம்மாள்புரம் சோதனை சாவடி வழியாக சென்று மேலப்பாளையம் சென்று வி.எஸ்.டி. சந்திப்பு வழியாக அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டும்.
மேலும் ஓட்டு எண்ணிக்கைக்கு வரும் வருவாய்த்துறை அதிகாரிகள், தேர்தல் பணி அலுவலர்கள் அனைவருக்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களை தனித்தனியாக நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் உடன் வரும் கட்சி பணி வாகனங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்ஜினீயரிங் கல்லூரி மைய நுழைவு வாயிலில் வேட்பாளர்களை இறக்கி விட வேண்டும். கல்லூரி சுற்று சுவரின் தென்பகுதியில் வேட்பாளர் வாகனம் நிறுத்த இடம், இதர கட்சி வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
காவல்துறை வாகனங்கள் அனைத்தும் ரெட்டியார்பட்டி சாலைக்கு எதிரே மேற்கு புறத்தில் மேலப்பாளையம் செல்லும் சாலையில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.