நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் 33 பன்றிகள் பிடிபட்டன
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த 33 பன்றிகள் பிடிபட்டன.
நாகர்கோவில்,
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சுற்றித்திரிகின்ற பன்றிகளை பிடித்து செல்ல மதுரையை சேர்ந்தவருக்கு நகராட்சியாக இருக்கும்போதே ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மதுரையை சேர்ந்த அந்த ஒப்பந்ததாரர் தனது ஊழியர்களை அவ்வப்போது அனுப்பி, நாகர்கோவிலில் சுற்றித்திரிகின்ற பன்றிகளை பிடித்து மதுரைக்கு கொண்டு செல்வார்.
அதன்படி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின்பேரில் நகர்நல அதிகாரி கின்சால் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் மாதேவன்பிள்ளை, பகவதிபெருமாள், ராஜா, ராஜேஷ், சத்தியராஜ் உள்ளிட்டோர் மேற்பார்வையில் மதுரை ஒப்பந்ததாரரின் ஊழியர்களால் பன்றி பிடிக்கும் பணி நேற்று நடந்தது.
வடசேரி பஸ் நிலையம், அருந்ததியர் தெரு, சுப்பையார்குளம், திரட்டுத்தெரு, கோட்டார் ரெயில்வே ரோடு, டி.வி.டி.காலனி ஆகிய பகுதிகளில் இந்த பணி நடைபெற்றது. அப்போது அங்கு சுற்றித்திரிந்த பன்றிகளை விரட்டி, விரட்டி வலைபோட்டும், கண்ணி வைத்தும் பிடித்தனர். இதில் மொத்தம் 33 பன்றிகள் பிடிபட்டன. அவற்றை ஊழியர்கள் லாரியில் ஏற்றி மதுரைக்கு கொண்டு சென்றனர். பன்றிகள் ஏற்றப்பட்ட லாரியின் பாதுகாப்புக்காக சிறிது தூரம் வரை போலீசார் ஜீப்பில் சென்று அனுப்பி வைத்தனர்.