பிளஸ்-1 தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு கல்வித்துறை அதிகாரி தகவல்

பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-20 22:45 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மார்ச் 2019 மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ்-1) பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் விடைத்தாள்களின் நகல் வேண்டும் என்று விண்ணப்பித்தவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் scan.tnd-ge.in என்ற இணைய தளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்கு உரிய விடைத்தாள்களின் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணைய தள முகவரில் ap-p--l-i-c-at-i-on for ret-ot-a-l-l-i-ng/rev-a-lu-at-i-on என்ற தலைப்பினை cl-i-ck செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

இந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை புதுவை இணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை புதுச்சேரி இணை இயக்குனர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.

மறுகூட்டல்:- உயிரியல் பாடம் மட்டும் ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205. மறுமதிப்பீடு:- பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்