பிவண்டியில் 13 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம் தாய், அண்ணன் கைது

பிவண்டியில் 13 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. போலீசார் சிறுமியின் தாய் மற்றும் அண்ணனை கைது செய்தனர்.

Update: 2019-05-19 23:55 GMT
தானே,

புல்தானாவை சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்த நிலையில், அவளது தாய் மற்றும் அண்ணன் இருவரும் சேர்ந்து சிறுமியை 24 வயது வாலிபர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்திருந்தனர்.

இதுபற்றி புல்தானா தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமிக்கு தானே மாவட்டம் பிவண்டி பகுதியில் வைத்து திருமணம் நடக்க இருந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் நார்போலி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இருப்பினும் பிவண்டியில் சிறுமிக்கு எந்த இடத்தில் திருமணம் நடக்கிறது என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், அவளது தாயின் சேல்போன் இருக்கும் இடத்தை கண்டறிந்து போலீசார் அங்கு சென்றனர். பின்னர் அங்கு சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் சிறுமிக்கு திருமணம் செய்ய முயற்சித்த அவளது தாய், அண்ணன் இருவரையும் கைது செய்தனர்.

போலீசார் வருவதை ஏற்கனவே அறிந்திருந்த மணமகன் தப்பி ஓடி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்