பாளையங்கோட்டையில் ‘எலைட்’ மதுக்கடை திறப்பு

பாளையங்கோட்டையில் ‘எலைட்’ மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது.;

Update: 2019-05-19 21:45 GMT
நெல்லை, 

டாஸ்மாக் சார்பில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சராசரியான மது வகைகள் விற்பனை செய்கின்றனர். இதுதவிர வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் தயார் செய்யப்படும் உயர் ரக மது ரகங்களை விற்பனை செய்வதற்காக பிரத்யேகமாக ‘எலைட்’ என்ற பெயரில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்ட தலைநகரங்களில் இந்த கடைகள் செயல்பட்டு வருகின்றன.

அதேபோல் நெல்லையிலும் ‘எலைட்’ மதுக்கடை திறக்க வேண்டும் என்று உயர்ரக மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் பஸ் நிறுத்தம் அருகே வாய்க்காலையொட்டி உள்ள தெருவில் ‘எலைட்’ மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது. இதை அறிந்த மதுப்பிரியர்கள் தற்போது இங்கு வந்து உயர்ரக மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். இங்கு 750 மில்லி லிட்டர், 1 லிட்டர் என்ற அளவில் பாட்டிலாக மட்டுமே மது விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தற்போது ரூ.800 முதல் ரூ.3,500 வரையிலான மதுபாட்டில்கள் கிடைக்கிறது. விரைவில் மேலும் அதிக விலையிலான மதுவகைகள் வர இருக்கின்றன. இதுதவிர ரூ.120 முதல் ரூ.400 வரையிலான பீர் பாட்டில்கள் இங்கு குளிரூட்டப்பட்ட நிலையில் கிடைக்கிறது. இதை அறிந்த மதுப்பிரியர்கள் தற்போது இந்த கடைக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்