கர்நாடகத்தில் குந்துகோல், சிஞ்சோலி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 76 சதவீத வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது
கர்நாடகத்தில் குந்துகோல் மற்றும் சிஞ்சோலி சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. 2 தொகுதிகளிலும் சேர்த்து 76 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் அமைதியாக நடைபெற்றது.;
பெங்களூரு,
கர்நாடகத்தில் நடந்து வரும் கூட்டணி ஆட்சியில் மந்திரியாக பணியாற்றியவர் சி.எஸ்.சிவள்ளி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தார்வார் மாவட்டம் குந்துகோல் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் சி.எஸ்.சிவள்ளி மரணம் அடைந்தார்.
அதுபோல கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த உமேஷ் ஜாதவ், மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தியில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜனதாவில் இணைந்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் உமேஷ் ஜாதவ் கலபுரகி தொகுதியில் களம் கண்டார்.
இதனால் சி.எஸ்.சிவள்ளி, உமேஷ் ஜாதவ் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக பதவி வகித்த குந்துகோல், சிஞ்சோலி தொகுதிகள் காலியாகின. அந்த 2 தொகுதிகளிலும் 19-ந் தேதி (அதாவது நேற்று) இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் சார்பில் குந்துகோல் தொகுதியில் சி.எஸ்.சிவள்ளியின் மனைவி குசுமாவதி, சிஞ்சோலியில் சுபாஷ் ராத்தோடு ஆகியோரும், பா.ஜனதா சார்பில் குந்துகோலில் சிக்கன்னகவுடா, சிஞ்சோலியில் அவினாஷ் ஜாதவ் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். 2 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அந்த 2 தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 83 ஆயிரத்து 313 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 96 ஆயிரத்து 548 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 86 ஆயிரத்து 744 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 21 பேரும் உள்ளனர். இவர்களுக்காக குந்துகோல் தொகுதியில் 241 வாக்குச்சாவடிகளும், சிஞ்சோலியில் 214 வாக்குச்சாவடிளும் என மொத்தம் 455 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அந்த 2 தொகுதிகளிலும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி ஓட்டுப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டனர். ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டினர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
இந்த இடைத்தேர்தலில் 85 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டது. அதனால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இடைத்தேர்தல் நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிஞ்சோலி குட்லா கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை விரட்டியடித்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. குந்துகோல் தொகுதியில் சிக்கனார்த்தி, யலகுப்பி ஆகிய வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை. இதனால் அங்கு ஓட்டுப்பதிவு தொடங்குவதில் சிறிது காலதாமதம் உண்டானது. சிறிது நேரத்தில் என்ஜினீயர் வரவழைக்கப்பட்டு, எந்திரங்கள் சரிசெய்யப்பட்டன. அதன் பிறகு அந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கியது.
குந்துகோல் தொகுதியில் 2 மற்றும் சிஞ்சோலி தொகுதியில் 10 என மொத்தம் 12 ஒப்புகை சீட்டு எந்திரங்கள் மாற்றப்பட்டதாக இணை தலைமை தேர்தல் அதிகாரி ஏ.வி.சூர்யாசென் கூறினார். பகல் 1 மணி வரை 2 தொகுதியிலும் சேர்த்து 41.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. பகல் 3 மணி நிலவரப்படி 57 சதவீத வாக்குகள் பதிவாயின. முடிவில் 2 தொகுதி களிலும் சேர்த்து 76 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் சிஞ்சோலி தொகுதியில் 70.30 சதவீத வாக்குகளும், குந்துகோல் தொகுதியில் 81.33 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஒரு சில வாக்குச்சாவடிகளில் சிறிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டதை தவிர்த்து ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
மாலை 6 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிவடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பூட்டி சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த இடைத்தேர்தல் முடிவு கர்நாடக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பா.ஜனதா வெற்றி பெற்றால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 106 ஆக உயரும். இதன் மூலம் அரசியல் மாற்றம் குறித்த பிரச்சினைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரம் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.